தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் விக்னேஷ் தற்போது எல்.ஐ.கே (LIK) என்ற படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளானர்.. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது..
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இந்த நிலையில் எல்.ஐ.கே படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.. இந்த படத்தின் 2040-ல் நடப்பது போல காட்டப்பட்டுள்ளது.. ஆகாயத்தில் பறக்கும் கார்கள், அடையார் பாலத்தில் அசுர வேகத்தில் செல்லும் புல்லட் ரயில், டிஜிட்டல் குடை என பல காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும் படி அமைந்துள்ளது.. ரோபோவின் வாய்ஸ் ஓவர், எஸ்.ஜே சூர்யாவின் எண்ட்ரி, பிரதீப், கீர்த்தி ஷெட்டி பேசும் வசனங்கள் என அனைத்தும் 2கே கிட்ஸ்களுக்கான படம் என்பதை காட்டுகிறது..