Court: ஜாபர் சாதிக் தொடுத்த வழக்கு… வீட்டின் சீல் அகற்றம்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

டெல்லி பாட்டியாலா நீதிமன்ற உத்தரவின்படி, மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டுக்குப் போடப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, ஜாபர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என்றும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றுவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் வீட்டிற்கு வைக்கப்பட்ட சிலை அகற்ற உத்தரவிட்டனர்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், ரூ. 2,000 கோடி அளவிற்கு போதை பொருட்களை கடத்தியதாக கூறி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், சோதனைக்குப் பிறகு வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் தற்பொழுது அந்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Vignesh

Next Post

லிவ்-இன் உறவில் உள்ளவர்கள் பிரிந்தால்!... நீதிமன்றம் வைத்த செக்!

Sun Apr 7 , 2024
live-in relationship: லிவ்-இன் உறவில் உள்ள தம்பதிகள் பிரிந்தால் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு உறவைத் தொடங்குவது மிகவும் எளிதானது. ஆனால் அதை உண்மையான இதயத்துடன் பராமரிப்பது மிகவும் கடினம். அதே நேரத்தில், உறவை வலுப்படுத்த, தம்பதிகள் பெரும்பாலும் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள். இது ‘லிவ்-இன்’ உறவு என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இது சட்டப்பூர்வமானது, ஆனால் இந்தச் சட்டத்தில் ஆண் மற்றும் பெண் […]

You May Like