தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் இருந்த பவுன்சர்கள் சரத்குமாரை குண்டுகட்டாக தூக்கி வீசினர்.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது..
இதை தொடர்ந்து சரத்குமாரின் தாய் விஜய்யை விமர்சித்து பேட்டியளித்திருந்தார்.. அப்போது “என் பையன் திருச்சிக்கு வேலைக்கான இண்டர்வியூக்குப் போகிறேன் என்றுதான் வீட்டிலிருந்து சென்றான். மாநாட்டில் இருப்பதை நாங்கள் பின்னர்தான் அறிந்தோம். விஜய்யை பார்க்கும் ஆர்வத்தால் மேடையில் ஏறினான். பொறுமையுடன் அணுகியிருக்கலாம்..! பவுன்சர்கள் குப்பை மாதிரி தூக்கி வீசியது மிகவும் கொடுமை” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
ஒரு உயிரின் மதிப்பு விஜய்க்கு தெரியுமா? இப்பவே ரசிகர்களை பாதுகாக்க முடியவில்லையெனில், மக்களை எப்படி பாதுகாப்பார்? ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், முதலில் மனிதத்தன்மை இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய்யின் பவுன்சர்கள் மீது சரத்குமார் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் இந்த புகாரை அளித்துள்ளார்.. மதுரை தவெக மாநாட்டில், விஜய்யின் பவுன்சர்கள் தன்னை குண்டுகட்டாக தூக்கி வீசியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.. இந்த பவுன்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.. மேலும் தனது புகாரில் “ இந்த சம்பவம் நடந்த பின்னர், தவெக நிர்வாகிகள் சிலர், என்னிடம் சமாதானம் பேசியதால், தூக்கி வீசப்பட்டது நான் இல்லை என்று மறுப்பு வீடியோ வெளியிட்டிருந்தேன். ஆனால் அதன்பின்னர் கட்சியினர் என்னை கொண்டுகொள்ளவில்லை.. என்ன விஷயம் என்று நேரில் வந்து விசாரிக்கக்கூட வில்லை.. கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே என்னை மூளைச்சலவை செய்தனர்.. எனவே என்னை தூக்கி வீசிய பவுன்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று தெரித்துள்ளார்..
Read More : இன்னும் 2 மாநாடு நடத்தினாலே போதும்.. விஜய் காலி டப்பா ஆகிவிடுவார்.. அமைச்சர் சேகர்பாபு அட்டாக்!