ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை..! விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

vijay chennai high court income

கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது.


இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு, வருமானத்தை மறைத்ததற்கான ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.. தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது..

இந்த நிலையில் விஜய் தாக்கல் வழக்கில் இறுதி விசாரணை கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.. அப்போது விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.. ஆனால் காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

வருமான வரித்துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், 6 மாத கால அவகாசத்திற்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வருமான வரிச் சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான்.. எனவே விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது..

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி செந்தில் குமார் தீர்ப்பளிக்க உள்ளார்..

Read More : “முதலமைச்சரை விடுங்க.. சங்கீதாவே விஜய்க்கு ஓட்டுப் போடமாட்டங்க..” பொளந்து கட்டிய திருச்சி சூர்யா..!

RUPA

Next Post

இன்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமை..!! அம்மனுக்கு பிடித்த எலுமிச்சை மாலை..!! இப்படி வழிபட்டு பாருங்க..!!

Fri Feb 6 , 2026
ஆன்மீக மரபில் ஆடி மற்றும் தை மாதங்கள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த காலங்களாக போற்றப்படுகின்றன. இந்த விசேஷ நாட்களில் அம்மன் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் செய்யும் ஒரு காரியம் ‘எலுமிச்சை மாலை’ சாத்துவதாகும். உக்கிர தெய்வமாக போற்றப்படும் அம்பிகையின் சினம் தணித்து, அவளது கருணையை பெறுவதற்காக பின்பற்றப்படும் இந்த வழிபாட்டு முறைக்கு தனித்துவமான ஆன்மீக மற்றும் தத்துவப் பின்னணிகள் உள்ளன. அம்மன் கோயில்களில் எலுமிச்சை மாலை சாத்தப்படுவதற்கு பின்னால் […]
Amman God 2026

You May Like