கர்நாடகாவில் இருந்த முக்கிய வம்சங்களில் ஒன்றுதான் ஷாஹி வம்சம். 1658ஆம் ஆண்டில் இவ் வம்ச அரசர் இரண்டாம் அலி அடில் ஷாஹி போருக்கு தயாராகி, சிவாஜி என்ற மாறாட்டிய சத்ரபதியை எதிர்க்க திட்டமிட்டார். அதற்காக அவருடைய முன்னணி தளபதியாக இருந்தவர் அப்சல் கான். சிறு பகுதியையும் ஆண்ட இவர், படையில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரனையும் தானே தேர்வு செய்தார். பல நாட்கள் தேர்ந்தெடுத்த பிறகு, 12,000 வீரர்களைக் கொண்ட படையை உருவாக்கினார்.
போருக்கு செல்லும் முன் அப்சல் கான் ஜாதகத்தை பார்த்தார். அதில் அவர் போரில் இறந்து போவார் என கூறப்பட்டது. இதை கேட்டபோது அவன் மனதில் பயம் எழுந்தது, ஆனால் அது மனைவிகளைப் பற்றிய கவலை காரணமாக இருந்தது. அப்சல் கானுக்கு மொத்தம் 63 மனைவிகள் இருந்தனர். நான் போரில் இறந்துவிட்டால், என் மனைவிகள் வேறு யாருக்கும் திருமணம் செய்யக்கூடாது என எண்ணினார்.
எனவே தன் 63 மனைவிகளையும் கொல்ல திட்டமிட்டார். அவர்கள் அனைவரையும் தன்னுடைய கல்லறைக்கு அருகிலேயே கொன்று புதைக்க முடிவெடுத்தார். அந்த காலத்தில் மன்னர்கள், தளபதிகள் தாங்கள் உயிருடன் இருக்கும்போதே சமாதி கட்டி கொள்வது ஒரு மரபாக இருந்தது. அப்சல் கான் தன் மனைவிகளை எப்படி கொன்றார் என்ற சரியான தகவல்கள் இல்லை.
63 மனைவிகளையும் கொன்ற பிறகு தனது சமாதி அருகே அடக்கம் செய்தார். மனைவிகளை கொன்ற அப்சல் கான் போருக்கு புறப்பட்ட சென்றார். ஜாதகத்தாலோ அல்லது சிவாஜியின் வீரத்தாலோ தெரியவில்லை அப்சல் கான் போரில் கொல்லப்பட்டார். போரில் கொல்லப்பட்ட அப்சல் கானின் உடலை அவருடைய மகனை எடுத்து செல்ல அனுமதித்தார் சிவாஜி . கர்நாடகாவில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் இன்றும் அந்த 63 சமாதிகள் முக்கிய அடையாளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிக கொடூரமான சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
Read more: செல்போன் வெடிக்க காரணம் இதுதான்.. தவிர்ப்பதும் தப்புவதும் எப்படி..?