“ப்ரேக்-அப் பண்ணிக்கலாம்.. எங்க வீட்ல நோ சொல்லிட்டாங்க..” காதலை கைவிட சொன்ன இன்ஸ்டா காதலி..! இறுதியில் சோகம்..

Love Sex 2025

திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 21). பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜெயஶ்ரீ (வயது 19) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.


சமீபத்தில் ஜெயஶ்ரீ இந்த காதலை தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த பிரவீன், காதலை தொடர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரவீன் ஜெயஸ்ரீ இருவரும் நேற்று திருவாரூர் திருக்கண்ணமங்கை அருகே உள்ள சேட்டாகுளம் கரை அருகே சந்தித்து அமர்ந்து பேசி வந்தனர்.

அப்போது ஜெயஶ்ரீ, வீட்டில் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் நம் காதலை தொடர வேண்டாம் என்று மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். இதில் மனமுடைந்த பிரவீன், திடீரென ஓடி சென்று அருகில் உள்ள குளத்தில் குதித்துவிட்டார். இதை எதிர்பார்க்காத ஜெயஶ்ரீ, அவரைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கியுள்ளார்.

இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து மீட்க முயற்சி செய்துள்ளனர். இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பிரவீன்குமார் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஜெயஶ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: நட்பு என்பது பாலியல் வன்கொடுமைக்கான உரிமம் அல்ல : முன்ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

English Summary

The Instagram girlfriend who told him to give up on love…the boyfriend committed suicide by jumping into the pool

Next Post

Breaking : தமிழ்நாட்டிலும் அடுத்த வாரம் முதல் S.I.R பணிகள் தொடங்கும்; உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்..

Fri Oct 24 , 2025
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் “ சென்னை தி நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, திமுகவுக்கு ஆதரவாக சேர்க்கப்பட்டுள்ளது.. திமுகவுக்கு ஆதரவாக சுமார் 13,000 அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. […]
tamilnadu sir election commission

You May Like