கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞன் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாப்ட்வேர் என்ஜினியரான அவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருவட்டார் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் முதுகலை படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.
திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் உண்ணாமலை கடை பயணம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணப்பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். மன மகன் வீட்டாருக்காக காத்திருந்த மணப்பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது பெண்ணின் தந்தைக்கு, மணமகனின் மாமா என்று ஒருவர் போனில் பேசி உள்ளார். மணமகன் பெங்களூருவில் ஒரு வழக்கில் கைதாகி உள்ளதாகவும், உங்கள் மகளுக்கு வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள்.. இதனை கேட்டு, மணப்பெண் வீட்டார் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள்.
விவரத்தை அறிய மணப்பெண் வீட்டார் தரப்பினர், மணமகனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. மணமகனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவதும், மனமகனான ஐடி ஊழியர் உடன் பணி புரியும் பழனியை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். காதலியை கரம்பிடிக்க மணப்பெண்ணை அவர் ஏமாற்றியது விசாரணையில் அம்பலமானது. மேலும் காதலியை அவர் ரகசிய திருமணம் செய்ததும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் கன்னியாகுமரி திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று தாறுமாறு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?



