மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.4,000 உதவித்தொகை… விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

money e1749025602177

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.


பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இயக்குநரகம் சார்பில், மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தகுதியான மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி அளவில் விண்ணப்பங்களை சரிபார்க்க வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தென் தமிழகம் & டெல்டா மாவட்டங்களில் இன்று மழை...! வானிலை மையம் தந்த எச்சரிக்கை...!

Sun Dec 14 , 2025
தமிழகத்தில் இன்று மற்றும், நாளை 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் […]
rain 1

You May Like