த.வெ.க கொடியை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விதமாக செப்டம்பர் மாதம் முதல் வாரம் முதல் டிசம்பவர் மாதம் வரை விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன், தங்களது சபையின் சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிற கொடி வணிகச் சின்னமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நிறத்தில் த.வெ.க. பயன்படுத்தும் கொடி வணிகச் சின்னச் சட்டத்தையும் பதிப்புரிமைச் சட்டத்தையும் மீறுகிறது என்றும், இரண்டு கொடிகளும் ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது என்றும், எனவே த.வெ.க. கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார்.
த.வெ.க. தரப்பு வாதம்: மனுதாரர் சபையோ, த.வெ.க.வோ எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என்பதால் கொடி மீது உரிமை கோர முடியாது என வாதிட்டது. த.வெ.க. கொடி மற்றும் மனுதாரர் சபை கொடி முற்றிலும் வேறுபட்டவை என்றும், த.வெ.க. கொடியால் மனுதாரருக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.
நீதிமன்ற தீர்ப்பு: நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இரு கொடிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, மனுதாரர் சபை கொடியைத் த.வெ.க பயன்படுத்தியதாகச் சொல்ல முடியாது என்றும், த.வெ.க. கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் இல்லை என்றும் கூறினார். எனவே, த.வெ.க. கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனவும், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த இடைக்காலத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தார்.
Read more: அக்னி வீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விருப்பமா..? நல்ல வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!