Flash: “விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும்” மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து..!

joy crizilda madhampatty rangaraj

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிசல்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.


பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் உறவு தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. சமீபத்தில் ஜாய் தனது தரப்பு நியாயங்களை சமூக வலைத்தளங்களில் விளக்க தொடங்கிய பிறகு, பொதுமக்களின் கருத்து மாற தொடங்கியது. ரங்கராஜ் தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், தன்னுடன் 2 ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை மாதம்பட்டி தவிர்ப்பதாகவும், ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள ஜாய், காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நீதி கோரியுள்ளார்.. மாதம்பட்டி ரங்கராஜும் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசல்டாவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவதூறாக ஜாய் கிரிசில்டா பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உறவு குறித்து ரங்கராஜ் மறுப்பு தெரிவிக்காததால், ரங்கராஜ் குறித்து கருத்துக்களை தெரிவிக்க ஜாய் கிரிசல்டாவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர். உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். எனவே விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நீதிபதி என். செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Read more: இந்த பிரச்சனை உள்ளவர்கள் பாசிப்பருப்பு சாப்பிடக்கூடாது.. சிறுநீரக கல் உருவாகும்..!! உஷாரா இருங்க..

English Summary

The Madras High Court has refused to ban Joy Grizalda from making comments about chef Madampatti Rangaraj.

Next Post

குளிர்பானத்தில் போதைப்பொருள்..!! மருத்துவ மாணவியை மாதக் கணக்கில் கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! ஷாக்கிங் சம்பவம்..!!

Mon Oct 6 , 2025
டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்குக் குளிர்பானத்தில் ரகசியமாக போதைப்பொருளைக் கலந்து கொடுத்து, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், தற்போது டெல்லியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். இந்நிலையில், அதே ஜிந்த் பகுதியைச் சேர்ந்தவரும், டெல்லியில் போட்டித் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருபவருமான ஒரு இளைஞர், அந்த மாணவிக்கு நன்கு […]
rape 1

You May Like