கற்றாழை செய்யும் மாயம் !!

கற்றாழை அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சைகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் ஜெல்,

கற்றாழை தலை முதல் கால் வரை வெளிப்புறம் மட்டுமல்லாது உள்ளுறுப்புகளுக்கும் நன்மை செய்யும் ஒரு தாவரம். அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த செடி கற்றாழை. ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் பிரபலமாகி வருவதால் அழகுக்காக வளர்க்கப்பட்டு வந்த செடி இன்று ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

வெப்பமண்டல நாடுகளில் அதிகம் வளரும் இந்த செடி எந்த ஒரு பெரிய கஷ்டமும் கொடுக்காமல் எளிது வளரக் கூடியது. இதனை பராமரிப்பது மிகவும் எளிது. இந்த செடிக்கு அதிக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. “அழிவில்லாத ஒரு செடி” என்று இதனைக் கூறலாம்.

பல நூற்றாண்டுகளாக அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சைகளில் கற்றாழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழற்சி, தொற்று பாதிப்பு, எரிச்சல், தீக்காயம், செரிமான பிரச்சனை, அஜீரணம், வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது.

கற்றாழையை சருமத்தின் மேற்புறம் பயன்படுத்துவத்தைக் காட்டிலும் உட்கொள்வதால் இன்னும் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. கற்றாழை இலையை பாதியாக நறுக்கும்போது அதன் மத்தியில் இருந்து ஜெல் வெளிப்படுகிறது. கற்றாழையின் சிறந்த பகுதியாக இது அறியப்படுகிறது. இந்த ஜெல்லில் அலோய்ன் என்னும் கூறு உள்ளது. இந்த அலோய்ன் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்கள் இது குறித்த மாற்றுக்கருத்தை தெரிவிக்கின்றனர். மேலும் அதிக அளவு கற்றாழை சாறு உட்கொள்வதால் சில தீவிர பக்க விளைவுகள் உண்டாகலாம். அவை உடல் பலவீனம், வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையாகும்.

கற்றாழையை எவ்வாறு சாப்பிடலாம்? : 1. அப்படியே சாப்பிடலாம்

கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அப்படியே நேரடியாக சாப்பிடலாம். அல்லது நீங்கள் தயாரிக்கும் ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம். இதன் வழுக்கும் தன்மை மற்றும் மிதமான நறுமணம் சாலட்டில் நல்ல சுவையைத் தரும்.

2. கற்றாழை சாறு பருகலாம் : அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்சிடென்டன்ட் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு பொருள் கற்றாழை. கற்றாழை கொண்டு தயாரிக்கப்படும் சாறு மிகவும் எளிய முறையில் உடலுக்கு நன்மை அளிக்கிறது. கற்றாழை இலையின் முனையை கிள்ளி எறிந்து விட்டு , இலையில் இருக்கும் ஜெல்லை எடுத்து தண்ணீரில் கலந்து அரைத்து சாறு தயாரிக்கலாம்.

3. கற்றாழை வறுவல் : கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் உப்பு மற்றும் வறுத்த சீரகம் சேர்க்கவும். இதனை உங்கள் சாண்டவிச் அல்லது ஸ்டார்டர் உணவுகளில் மேலே தூவி உட்கொள்ளலாம்.

4. வேகவைத்த கற்றாழை: தண்ணீர் பதம் அதிகம் உள்ள கற்றாழை வேகவைப்பதால் மிகவும் மென்மையாக மாறுகிறது. இதனை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

கற்றாழையின் நன்மைகள் : உறுதியான ஆதாரங்கள் இல்லாதபோதும் , கற்றாழை மிக அதிக நன்மைகளை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

aloe vera gel1

1. செரிமானத்தை மேம்படுத்துகிறது : கற்றாழை சாறு உட்கொள்வதால் அல்சர் மற்றும் இதர செரிமான கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.

2. சருமத்திற்கு இதமளிக்கிறது : கற்றாழை ஜெல் சருமத்தில் மேற்புறம் தடவுவதால் சருமத்தில் உண்டான காயங்கள், தடிப்புகள், கட்டிகள் மற்றும் எக்சிமா போன்ற பாதிப்புகள் குணமடைகிறது.

3. காயங்களை குணப்படுத்துகிறது : தீக்காயம், சூரிய வெப்பத்தால் உண்டான காயம் போன்றவற்றால் உண்டாகும் புண்களைப் போக்க பல காலமாக கற்றாழை சாறு பயன்படுத்தப்படுகிறது. விரைவாக புண்ணை ஆற்றும் தன்மை கற்றாழைக்கு உண்டு.

4. நெஞ்செரிச்சலைப் போக்குகிறது : வாய்வு அமிலத்தை குறைவாக சுரக்கச்செய்து நெஞ்செரிச்சலுக்கு முதன்மை காரணமான எதுக்களித்தலைப் போக்க உதவுகிறது கற்றாழை.

5. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது : நீரிழிவு பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் நீரிழிவிற்கு முந்தைய நிலையில் இருக்கும் நோயாளிகள் ஆகியோருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட ஆராய்ச்சியில் கற்றாழை க்ளைகோமிக் கட்டுப்பாட்டிற்கு உதவுவதாகவும், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது.

6. மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது : கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கீல்வாதம் தொடர்பான மூட்டு வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சியைத் தடுத்து , மூட்டுகளில் உண்டான காயத்தை அமைதிப்படுத்த கற்றாழை சாறு உதவுகிறது.

7. வாய் ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவுகிறது : கற்றாழையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான தொற்று பாதிப்பு மற்றும் காயங்களை போக்க உதவுகிறது. கற்றாழை பவுடர் கொண்டு தினமும் பற்களை தேய்ப்பதால் எந்த ஒரு தொற்று பாதிப்பு , வாய் அல்சர் , பற்குழி போன்றவை குணப்படுத்தப்படுகிறது . உங்கள் ஈறுகளை பலமாக்க, ஒவ்வொரு முறை கற்றாழை சாறு பருகும்போதும், அதனை விழுங்குவதற்கு முன்னர் ஒரு முறை கொப்பளித்து விட்டு பின்பு விழுங்கவும்.

8. பொடுகைப் போக்க உதவுகிறது:பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஈரப்பதம் கொண்ட கற்றாழை பொடுகைப் போக்குவதில் நல்ல பலன் தருகிறது. 4-6 வாரங்கள் தினமும் இரண்டு வேளை தலைக்கு கற்றாழை சாற்றை தடவுவதால் பொடுகு தொல்லை மாயமாகிறது.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? : 1. கற்றாழையின் நன்மைகளை முழுவதும் அடைவதற்கு மிதமான அளவு பயன்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை மிகவும் அவசியம். கற்றாழையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பின்பு பயன்படுத்தவும்.

2. முழு இலை கொண்டு தயாரிக்கப்படும் கற்றாழை சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக க்ரோன் நோய் பாதிப்பு அல்லது பெருங்குடல் புண் போன்ற பாதிப்பு இருந்தால் இவற்றின பயன்பாடு குடலை மேலும் எரிச்சல்படுத்தும்.

3. மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் கற்றாழை சாறு பயன்படுத்துவதால் நிலைமை மேலும் மோசமாகும்.

4. கற்றாழை சாற்றின் அதீத பயன்பாடு மலச்சிக்கலை உண்டாக்கும்..

5. கற்றாழை லாடெக்ஸ் அதிக அளவு பயன்படுத்துவதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் உண்டாகலாம்.

6. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவு கற்றாழை பயன்படுத்துவதால் அதில் இருக்கும் அந்தரகுயினோன் வயிற்றுப்போக்கை உண்டாக்கலாம்.

7. கற்றாழை சாறு பருகுவது அட்ரீனலின் சுரப்பதை அதிகரிக்கலாம். இது இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீங்கு உண்டாக்கும்.

8. பதப்படுத்தப்படாத கற்றாழை சாறு எடுத்துக் கொள்வதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை போன்ற பாதிப்புகளை உடலுக்குள் ஏற்படுத்தலாம். மேலும் உங்கள் சிறுநீரின் நிறம் பிங்க் அல்லது சிவப்பு நிறமாக மாறலாம்.

9. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு கற்றாழை லாடெக்ஸ் கொடுப்பது பரிந்துரைக்கப்படவில்லை. காரணம் இது பொட்டாசியம் அளவை குறைக்கிறது . இதனால் உடல் பலவீனம், ஒழுங்கற்ற இதய துடிப்பு, மென்மையான தசைகள் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.

10. அதிக அளவு அதாவது தொடர்ந்து ஒரு வருடம் கற்றாழை சாறு பருகுவதால் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

11. அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்கள் முன்னர் கற்றாழை சாறு பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவும். கரணம் , கற்றாழை அறுவை சிகிச்சையின்போது அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை உண்டாக்கக்கூடும்.

Next Post

பெரும் சோகம்... முக்கிய பிரபலம் திடீரென காலமானார்...! திரை பிரபலங்கள் இரங்கல்...!

Sun Oct 16 , 2022
கே.முராரி என்று அழைக்கப்படும் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. சினிமா கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டார். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையில் வெற்றி பெற்றவை. கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கினார். அவர் […]

You May Like