Rain Alert: இந்த 5 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…!

rain school holiday

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஓரிரு நாளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிஸா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 3-ம் தேதி வாக்கில் கரையை கடக்கும். இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவுக்கு பேரதிர்ச்சி..!! புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும் அபாயம்..!! 1.86 கோடி பேர் உயிரிழக்க நேரிடும்..!!

Wed Oct 1 , 2025
புற்றுநோய் குறித்த பாதிப்புகள் ஆங்காங்கே கேள்விப்பட்ட நிலை மாறி, தற்போது நாடு முழுவதும் புற்றீசல் போல அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இந்த அபாயகரமான நிலையை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை, இந்தியா உட்பட உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75% அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2050ஆம் ஆண்டுக்குள் […]
colorectal cancer

You May Like