அலர்ட்…! 4 மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை… மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க…!

rain 1

இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 10-ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆசிய கோப்பை ஹாக்கி!. 4வது முறையாக இந்தியா சாம்பியன்!. தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாறு!

Mon Sep 8 , 2025
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி 4வது முறையாக சாம்பியன் பட்டதை வென்றது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. இந்த தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி தென் கொரியாவை நேற்று எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் […]
hockey india champion

You May Like