அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 171 அப்டேட்!! ரஜினியுடன் இணையும் அந்த பிரபலம் யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ரஜினி 171’ படத்தில் நடிகை ஷோபனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தளபதி’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் டைட்டில் ‘கழுகு’ என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 171ல் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரஜினியுடன் நடிகை ஷோபனா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரமா என்பது குறித்த தகவல் இல்லை. முன்னதாக, 1991-ம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்தில் ரஜினியும், ஷோபனாவும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

    

Next Post

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!!

Tue Apr 9 , 2024
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலுக்கான தேதியை கடந்த […]

You May Like