சென்னையில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்: 20
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- கட்டாயம் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வை எழுதிருக்க வேண்டும். இருப்பினும், தேர்ச்சி கட்டாயமில்லை.
- மதிப்பெண் சான்றிதழை சமர்பிப்பது கட்டாயம் ஆகும்.
- விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த வட்டத்தை சேர்ந்தவரா இருக்க வேண்டும்.
- தமிழில் வாசித்தல் எழுதுதல் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
- எந்த பகுதிக்கு விண்ணப்பிக்கிறார்களோ அப்பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நபர்களின் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபடியாக 32 வயது வரை இருக்கலாம். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, டிஎன்சி ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் 37 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கும் தளர்வு உண்டு.
சம்பளம்: சென்னை மாவட்டத்தில் இப்பதவிக்கு நியமிக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் நிலை 6 கீழ் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: வாசித்தல், எழுதுதல் ஆகிய திறனறிவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chennai.nic.in/ என்ற சென்னை மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.