தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) மீண்டும் வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது. 2003ஆம் ஆண்டுக்கு முன் OPS அமலில் இருந்தது. இந்தத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வாழ்நாள் முழுவதும் அரசு வழங்கும் ஓய்வூதியத்தைப் பெற்று வந்தனர். ஆனால் 2003இல் மத்திய அரசு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (NPS) கொண்டு வந்தது.
இதன்படி ஊழியர்கள் மாத சம்பளத்தில் இருந்து ஒரு தொகை கட்டாயம் செலுத்த வேண்டும்; அந்தத் தொகை முதலீடு செய்யப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக வழங்கப்படும். 2003ஆம் ஆண்டுக்கு முன் OPS அமலில் இருந்தது. இந்தத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வாழ்நாள் முழுவதும் அரசு வழங்கும் ஓய்வூதியத்தைப் பெற்று வந்தனர். ஆனால் 2003இல் மத்திய அரசு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (NPS) கொண்டு வந்தது.
இதன்படி ஊழியர்கள் மாத சம்பளத்தில் இருந்து ஒரு தொகை கட்டாயம் செலுத்த வேண்டும்; அந்தத் தொகை முதலீடு செய்யப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாக வழங்கப்படும். OPS மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் DMK, OPS மீண்டும் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் தொடர்ந்து நான்கு பட்ஜெட்கள் முடிந்தும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் OPS அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு OPS நடைமுறையில் இருக்கும் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதோடு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களையும் பெற்றுள்ளது. இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை செப்டம்பர் 30ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறது.
அரசு ஊழியர்கள், “இனி கால அவகாசம் கொடுக்கக்கூடாது, OPS குறித்த முடிவை உடனே அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடைமுறைகள் தொடங்கும் நிலையில், OPS குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, OPS குறித்த அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில், அதாவது தீபாவளி பரிசாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.
Read more: EPFO: 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் வெளியீடு…! முழு விவரம் இதோ…