தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து சில நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகின்றனர்..
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட அமமுக இளைஞர் அணி செயலாளர் குமரேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து கட்சியில் இருந்து வெளியேறிய சிலரை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பணியில் இபிஎஸ் களமிறங்கி உள்லார்.. இது ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது..
Read More : தட்டித்தூக்கிய விஜய்..! அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தவெகவில் இணைந்தார்..!



