சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது…!

Central 2025

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01 ஆக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01,ஆக மணியாக இருக்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01 ஆக இருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும்…! மத்திய அமைச்சர்

Vignesh

Next Post

மாணவர்களே..!! மதிப்பெண்களில் சந்தேகமா..? இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! கட்டணம் எவ்வளவு..?

Thu Jun 5 , 2025
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், இந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் […]
School Exam 2025

You May Like