தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. மீண்டும் ஒரு சவரன் ரூ.43,000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,385க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064க்கு விற்பனையாகிறது.. எனினும் எனினும் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

பூவே உனக்காக கதாநாயகியா இவர்…..? எப்படி இருக்கார்னு பாருங்க….!

Wed Feb 8 , 2023
தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில திரைப்படங்களை பொதுமக்களால் கடைசி வரையிலும் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜயின் காதலியாக நடித்திருந்தவர் தான் அஞ்சு அரவிந்த். இவர் பல மலையாள திரைப்படங்கள் நடித்திருக்கிறார் தமிழ் என்று எடுத்துக் கொண்டால் பூவே உனக்காக, எனக்கு ஒரு […]

You May Like