கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை வெள்ளியின் விலை தற்சமயம் குறைந்து இருக்கிறது. நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்திருக்கிறது.
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து 5,607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 240 வரையில் குறைந்து 44,856 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
22 கேரட் ஆபரணம் தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து 5245க்கும் ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 41,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 50 பைசா குறைந்து 71.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது