ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் ஸ்நேஹா பட்நாயக் (22) என்ற மாணவியின் விவகாரம், தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஓராண்டிற்கும் மேலாக தனது கல்லூரி பேராசிரியரான டாக்டர் விக்ரம் மிஸ்ராவுடன் ஸ்நேஹா ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
திருமணமான விக்ரம், ஸ்நேஹா கர்ப்பமான செய்தியை அறிந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்து ஒதுங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட அச்சமும் அவமானமும், ஸ்நேஹாவை ஒரு ஆபத்தான முடிவை நோக்கித் தள்ளியது. தனது தவறினை மறைக்க, தன் தம்பியின் நண்பரான ராகுல் சாஹுவை வன்கொடுமை புகாரில் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார். ராகுலுடன் முன்னர் பழகியபோது எடுத்த புகைப்படங்களை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தக் கருவிற்கு அவர்தான் காரணம் என ஸ்நேஹா மிரட்டியுள்ளார்.
இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றபோதுதான், உண்மை நிலவரம் தலைகீழாக மாறியது. ராகுல் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்ததோடு, ஸ்நேஹாவின் கடந்த கால தொடர்புகள் குறித்துக் காவல்துறைக்குத் துப்பு கொடுத்துள்ளார். தீவிர விசாரணையில், ஸ்நேஹா கருவுற்றதற்கு காரணமானவர் ராகுல் அல்ல, பேராசிரியர் விக்ரம் மிஸ்ரா என்பது உறுதியானது. இந்தச் சதித் திட்டத்திற்கு ஸ்நேஹாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பேராசிரியர் விக்ரம் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு சிறிய தவறினை மறைக்க முயன்று, பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மற்றவரின் வாழ்வை சிதைக்க துணிந்த மாணவியின் செயல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பிரிட்ஜில் காய்கறிகளை வைக்கும்போது உஷார்..!! கல்லீரலை கூட பாதிக்கும்..!! சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!!



