ஹோட்டலில் ஹேர் டிரையரால் பயன்படுத்தியதால் வந்த வினை..!! ரூ.1 லட்சம் அபராதம்..!!

ஆஸ்திரேலியாவின் `நோவோடெல் பெர்த் லாங்க்லி’ என்ற ஹோட்டலில் கெல்லி என்ற பெண் தங்கியுள்ளார். அவர் தன்னுடன் எடுத்து வந்த ஹேர் டிரையர் (Hair Dryer) மூலமாக தலையை உலர்த்தி உள்ளார். அப்போது ஹேர் டிரையர், ஃபயர் அலாரமை (Fire Alarm) தூண்ட அலாரம் ஒலித்துள்ளது. அந்த இடத்திற்கு வேகமாக வந்த தீயணைப்பு குழுவினர், ஹேர் டிரையரால் அலாரம் ஒலிக்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து சென்று விட்டனர். இதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த கெல்லிக்கு அப்போது தான் பிரச்சனையே தொடங்கியுள்ளது.

3 நாட்களுக்குப் பிறகு கெல்லியின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1,10,000 குறைந்துள்ளது. பொய்யான ஃபயர் அலாரமை எழுப்பியதற்காக அபராதமாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகை பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையால் அமைக்கப்பட்ட பொய்யான அலாரங்களுக்கான அபராதத்தை விடக் கூடுதலாக வசூலித்துள்ளனர்.

இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக கொடுக்க கெல்லி தயாராக இல்லை. ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட கெல்லி, `இந்தக் கொள்கை நியாயமானதா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் ஊடக கவனத்தைப் பெற்ற பிறகு, இறுதியாக அவரது பணம் அவருக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

64 வயது மூதாட்டி கற்பழிப்பு.! நிர்வாண நிலையில் வீசப்பட்ட கொடூரம்.! இளைஞர் கைது.!

Wed Dec 20 , 2023
மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் 64 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மீட்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையின் மகாராஷ்டிரா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி தனது பக்கத்து வீட்டைச் சார்ந்த 38 வயது இளைஞரால் […]

You May Like