தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2025ம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் உதவியாளர், ஜூனியர் வருவாய் ஆய்வாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட், தட்டச்சர், தனிப்பட்ட எழுத்தர், கள உதவியாளர், வனக் காவலர் உள்ளிட்ட 4,662 பணியிடங்களை நிரப்பும் நோக்கில் கடந்த ஜூலை 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
2013-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மொத்தம் ஏழு முறை குரூப் 4 தேர்வுகளை நடத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலான தேர்வுகளின் முடிவுகள் 3 முதல் 5 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் 2023ம் ஆண்டில் நடைபெற்ற 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்தது. இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.
அந்த சர்ச்சையைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டு 8,932 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெறும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டன. இப்போது 2025ம் ஆண்டுக்கான முடிவுகளும் அதே வேகத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் சமூக வலைதளங்களில் டிஎன்பிஎஸ்சியை பாராட்டி வருகின்றனர். தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை காண, டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ஐப் பார்க்கலாம்.
Read more: Vastu: நேர்காணலுக்கு செல்லும்போது இதை செய்யுங்கள்.. வெற்றி உங்களை தேடி வரும்..!



