ராசிபுரம் அருகே 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் திடீரென தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ(9), ரித்திகாஸ்ரீ(7), தேவஸ்ரீ(3) ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவர் விஷம்குடித்து தற்கொலை செய்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடன் சுமையே காரணம் எனக் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் நான்கு உயிர்கள் இழந்த இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: பீட்ரூட் ஜூஸ் நல்லது தான்.. ஆனால் இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கவே கூடாது..!!