கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (36). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (33). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பவித்ராவுக்கு கிருஷ்ணதாசின் நண்பரான ரமேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த 30ந் தேதி இரவு , கிருஷ்ணதாஸ், ரமேஷ், விமல் ஆகியோர் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். ஆனால் மறுநாள் காலையில் கிருஷ்ணதாஸ், ரத்த வெள்ளத்தில் அதே கட்டிடத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதை பார்த்த சிலர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். அவரது உடலில் அரிவாள் வெட்டு காயம் இருந்ததால் கொலை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணதாஸின் அம்மா கிருஷ்ணகுமாரி (61) போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கிருஷ்ணதாசின் மனைவி பவித்ராவுக்கும், ரமேஷூக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது.
இந்த விஷயம் என் மகனுக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளான். அந்த ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை விரிவுப்படுத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் பவித்ராவின் அம்மா முத்து லட்சுமிக்கும் தொடர்பு இருந்துள்ளது.
அவர் அளித்த வாக்குமூலத்தில், “என்னுடைய வீடும், கிருஷ்ணதாஸ் வீடும் பக்கத்திலேயே உள்ளது. இதனால் என்னுடைய மகளை கிருஷ்ணதாஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கிருஷ்ணதாஸுக்கு மதுப்பழக்கம் உண்டு. சில நாட்களுக்கு முன்பு போதையில் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
இதனால் மனவேதனை அடைந்த நான் இதுகுறித்து என்னுடைய மகள் பவித்ராவிடம் சொன்னேன். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பவித்ரா, இதுகுறித்து ரமேஷிடம் சொன்னார். அதன் பிறகுதான் ரமேஷ், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து கிருஷ்ணதாஸை பாழடைந்த மண்டபத்துக்கு அழைத்து சென்று வெட்டி கொன்றார்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பவித்ரா மற்றும் அவரது அம்மா முத்து லட்சுமியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Read more: ”விஜய் பேச்சை எல்லாம் மக்கள் கண்டுக்க மாட்டாங்க.. இது தவறான புரிதல்” விளாசிய பிரபலம்!



