இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் விண்வெளி பயன்பாட்டு மையம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது. அங்கு தற்போது முக்கிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
- திட்ட விஞ்ஞானி – I : 1 இடம்
- திட்ட அசோசியேட் – I : 12 இடங்கள்
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் 11.09.2025 தேதியின்படி, 35 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி 5 வருடங்கள், ஒபிசி 3 வருடங்கள் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி:
திட்ட விஞ்ஞானி – I (1 இடம்):
- வேளாண் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வேளாண் பொறியியல் / வேளாண்மை தகவல் தொழில்நுட்பத்தில் M.E / M.Tech முடித்திருக்க வேண்டும்.
- குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மற்றும் Remote Sensing, GIS அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
திட்ட அசோசியேட் – I (12 இடங்கள்)
- Geo-informatics / Remote Sensing / GIS பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது
- வேளாண் தகவல் தொழில்நுட்பம், Geo-informatics, வேளாண் பொறியியல் துறையில் B.Tech (65%) பெற்றவர்கள் – 7 காலியிடங்கள்.
- கணினி அறிவியல் / Data Science துறையில் B.Tech (65%) முடித்தவர்கள் – 1 காலியிடம்.
- வேளாண் அறிவியலில் M.Sc (65%) முடித்தவர்கள் – 4 காலியிடங்கள்.
சம்பளம்: திட்ட விஞ்ஞானி பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,000 மற்றும் HRA வழங்கப்படும். திட்ட ஆசோசியேட் பதவிக்கு மாதம் ரூ.31,000 மற்றும் HRA வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
* அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் (SAC) நிரப்பப்பட உள்ள திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட அசோசியேட் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படாது.
* விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
* நேர்காணல் மூலமே இறுதி தேர்வு நடைபெறும்.
* நேர்காணல் தொடர்பான தனிப்பட்ட அழைப்பிதழ் அனுப்பப்படாது.
* பதிலாக, தேர்வானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
* இப்பதவிகள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://careers.sac.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: சளி.. இருமல்.. இதயம்.. சருமம்.. இது எதுவும் பாதிக்காம இருக்க இந்த ஒரு பொருள் போதும்..!