மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு..! என்ன தெரியுமா..?

Tn Govt 2025

மின்சார வாகனங்களுக்கு வழங்கி வந்த 100% மோட்டார் வாகன வரி விலக்கை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், “மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு சலுகையானது இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், இந்த 100 சதவீதம் வரி விலக்கானது வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 2027-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இந்த வரி விலக்கு சலுகையானது, மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் என அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இது சுமார் 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தைத் தக்கவைக்கவும், ‘தமிழ்நாடு மின்சார வாகனக்கொள்கை 2023’-ன் நோக்கங்களை எட்டவும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையரின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் மின்சார வாகனங்களை வாங்குவோர் சாலை வரி செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு பெறுவர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: உலகில் ஒரு பள்ளி கூட இல்லாத நாடு பற்றி தெரியுமா? அதற்கான காரணம் இதோ!

English Summary

The Tamil Nadu government has issued a government order extending the 100% motor vehicle tax exemption offered to electric vehicles for another two years.

Next Post

RBI-ன் புதிய விதிகள்: இந்த 3 வகையான வங்கிக் கணக்குகள் ஜன., 1 முதல் மூடப்படும்.. உங்கள் கணக்கும் அவற்றில் ஒன்றா?

Wed Dec 31 , 2025
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கி விதிமுறைகளில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டுகளையும் சேமிப்பையும் நேரடியாகப் பாதிக்கும். ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, உங்கள் வங்கிக் கணக்கு நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது மூடப்படலாம். மோசடிகளைத் தடுப்பதற்கும், வங்கி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஆர்பிஐ 3 குறிப்பிட்ட வகையான கணக்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. செயலற்ற, […]
bank account 2

You May Like