முதல்வர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ரதன் பண்டிட் தற்போது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். முதல்வரின் அரசியல் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதாகவும் இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
எனினும் ஆஸ்தான ஜோதிடரை எப்படி அரசுப் பதவியில் நியமிக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.. இந்த நிலையில் ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப்பதவி வழங்கிய உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றது.. முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்றது..


