தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் வேலை.. ஆரம்பப சம்பளமே ரூ.35,400.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

tn govt jobs 1

தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) பல் சுகாதார நிபுணர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியிட விவரம்:

பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist) – 39

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது
  • அதிகபட்ச வயது: 32 வயது
  • மாற்றுத்திறனாளிகள்: 42 வயது வரை
  • முன்னாள் ராணுவத்தினர்: 48 வயது வரை
  • எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசிஎம், பிசி பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

* விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) அல்லது இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டு “பல் சுகாதாரம் டிப்ளமோ” (Diploma in Dental Hygiene) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* தமிழ்நாடு மாநில பல் மருத்துவ கவுன்சிலில் (Tamil Nadu Dental Council) பதிவு செய்திருக்க வேண்டும்.

* மேலும், 2008-ம் ஆண்டு நெறிமுறைக்கு முன்பு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் மருத்துவ சான்றிதழ் (Dental Certificate) படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 11 கீழ் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

* நேர்காணல் இல்லை, எழுத்துத் தேர்வும் கிடையாது.

* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

* அதாவது, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ / சான்றிதழ் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் (Merit List) வெளியிடப்படும்.

* பின்னர், சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 02.11.2025.

Read more: மிகப்பெரிய Layoff-ஐ திட்டமிடும் அமேசான்! 15% வரை HR ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பணிநீக்கம்? ஷாக் தகவல்..

English Summary

The Tamil Nadu Government Medical Recruitment Board (TN MRB) has issued an employment notification to fill the posts of Dental Hygienist.

Next Post

200 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் உருவாகும் யோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்!

Wed Oct 15 , 2025
வேத ஜோதிடத்தின்படி, 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகின்றன. அவ்வப்போது, ​​அவை மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இதன் மூலம் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன.. இந்த யோகங்களின் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. அத்தகைய யோகங்கள் சுப நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் உருவாகும்போது, ​​அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, தீபாவளி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்தது என்று […]
diwali horoscope

You May Like