“தவெக கொடி தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் பெருமை”..!! “பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு உச்சபட்ச அபராதம் போடுங்கள்”..!! புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு மனு..!!

Vijay 2025

நடிகர் விஜய், எப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாரோ, அப்போதில் இருந்து அவரை சுற்றி பிரச்சனைகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிப் பெயரில் தவறு, சின்னம் சர்ச்சை, அது வெற்றிக்கான பூவே கிடையாது என்று பல கருத்துகள் உலா வந்தன. ஆனால், அதையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல், தன்னுடைய அரசியல் பணியை தீவிரமாக செய்து வருகிறார்.


இதற்கிடையே, தவெக-வின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,“ ”நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி. எங்கள் கட்சியின் சின்னம் யானை சின்னம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது. எனவே, தற்போது தவெக கொடியில் இருக்கும் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதில்மனு தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ”பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தவெகவின் கொடி ஒரு கட்சி கொடி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமைகளை பிரதிபலிக்கக் கூடிய வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனித்துவத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களர்களை குழப்புவதற்காக அல்ல. எனவே, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மனுவை உச்சபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

Read More : மீண்டும் பீதியை கிளப்பும் கொரோனா மரணங்கள்..!! ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு..!! இணை நோய் இருப்பவர்கள் உஷார்..!!

CHELLA

Next Post

ஹார்வர்ட் பல்கலை.யில் புதிய வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை..!! - அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு

Thu Jun 5 , 2025
ஹார்வர்ட் பல்கலைக்கழக படிப்புகளில் சேர அமெரிக்காவிற்கு வரும் புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உயர்கல்வி, குறிப்பாக ஹார்வர்டு மீதான அதன் அடக்குமுறையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. குடியரசுக் கட்சி முன்னதாக பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்திருந்தது, அந்த உத்தரவு நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க […]
trum harvard

You May Like