அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடந்த 2021ம் ஆண்டு அலெக்ஸ் (34 வயது) என்பவருடனான திருமணத்தை முறித்துக்கொண்ட ஜாஸ்மின் வில்டே (33), தனது முன்னாள் கணவரின் தந்தையான மார்க் கிப்பனுடன் (62) நெருங்கி பழக தொடங்கியுள்ளார். வெளியூர் சுற்றுப்பயணங்கள், ரகசிய சந்திப்புகள், உல்லாசம் என யாருக்கும் தெரியாமல் இரண்டு ஆண்டுகளாக உறவை தொடர்ந்தனர்.
இறுதியில் கிப்பன் தனது மனைவியையும் விவாகரத்து செய்து, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் தனியாக குடியேறினார். இந்த விஷயம் அவரின் மகனுக்கு தெரிய வரவே விஷயம் பூதாகரமாய் வெடித்தது. தந்தை, தன் முன்னாள் மனைவியுடன் ரகசிய உறவில் இருப்பதை அறிந்த அலெக்ஸ், கோபத்தில் கார் ஏற்றி தாக்க முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சூழலில் தான் கிப்பன் தனது காதலியும் முன்னாள் மருமகளான ஜாஸ்மினை, நீச்சல் குளத்தில் உள்ள நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். கிப்பனின் உயிலில் (Will) தனது பெயர் இல்லாததைப் பார்த்த ஜாஸ்மின், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, கோபத்தில் கிப்பன் ஜாஸ்மினின் தலையைப் பிடித்து நீச்சல் குளத்தில் மூழ்கடிக்க முயன்றார். மூச்சுத்திணறிய ஜாஸ்மின் தப்பிக்க முடியாமல் தவித்தார்.
அந்த நேரத்தில் அக்கம்பக்கத்தினர் காட்சியை கண்டு உடனே போலீசுக்கு தகவல் அளித்ததால், ஜாஸ்மின் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து கிப்பன் போலீசிடம் கூறுகையில், “ஜாஸ்மின் என்னை அறைந்தார். கோபத்தில் தலையை நீரில் தள்ளினேன். ஆனால், கொல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை. அந்த நேரத்தில் இருவரும் மதுபோதையில் இருந்தோம்.” என்றார்.