குடியரசு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் போட்டிகளை நடத்துகிறது.
குடியரசு தினம் 2026 கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சகம், மைகவ் இணையதளத்துடன் இணைந்து 3 போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து மக்களும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைய கலைஞர்கள் நாட்டிற்கான தங்களது தேசபக்தியையும், மரியாதையையும் விளக்கும் வகையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் https://www.mygov.in/campaigns/republic-day-2026 இணையதளம் மூலம் நேரிடையாக நடைபெறும்.
தற்சார்பு, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் நீடித்த வளர்ச்சியையொட்டிய இந்தியாவின் பயணத்தை எடுத்துரைக்கும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசும், குடியரசுதின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அழைப்பிதழும் வழங்கப்படும்.காலத்தால் நிலைத்து நிற்கும் வந்தே மாதரம் முழக்கத்தின் மூலம் சுதந்திரத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் சிந்தனைகளை எழுதும் வகையில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் மைகவ் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுதியவர்களுக்கு சிறந்த பரிசுகள் வழங்கப்படும்.வந்தே மாதரம் பாடலை பாடி பதிவு செய்து சமர்ப்பிப்பதற்கான பாட்டுப் போட்டி நடைபெறுகிறது. விநாடி வினா போட்டி 2025 டிசம்பர் 1-ம் தேதி நேரடியாக நடைபெறவுள்ளது.



