மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு பரிசோதகர் (Trade Marks & GI Examiner) பதவிகளில் 100 காலிப்பணியிடங்கள் மற்றும் UPSC டெபியூட்டி இயக்குநர் (Deputy Director) பதவியில் 2 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
பதவியின் பெயர்: வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு பரிசோதகர், துணை இயக்குநர்
மொத்த காலிப்பணியிடங்கள்: 102
பிரிவுவாரியான காலிப்பணியிடங்கள்:
வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு பரிசோதகர்
- பொதுப் பிரிவு – 48
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) – 9
- ஒபிசி – 20
- எஸ்சி – 17
- எஸ்டி – 6
- மாற்றுத்திறனாளிகள் (PwD) – 8
துணை இயக்குநர்
- ஒபிசி – 1
- எஸ்சி – 1
வயது வரம்பு:
வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு பரிசோதகர்
- பொதுப்பிரிவு – 30 வயது வரை
- ஒபிசி – 33 வயது வரை
- எஸ்சி/எஸ்டி – 35 வயது வரை
- மாற்றுத்திறனாளிகள் – 40 வயது வரை
- துணை இயக்குநர்
- ஒபிசி – 43 வயது வரை
- எஸ்சி – 45 வயது வரை
கல்வித் தகுதி:
வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடு பரிசோதகர்
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்திருப்பது
- குறைந்தது 2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்
- அறிவுசார் சொத்து தொடர்பான முதுகலை பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை
துணை இயக்குநர்
- கலை, அறிவியல், வணிகம், பொறியியல்/தொழில்நுட்பம் துறைகளில் முனைவர் பட்டம் (Ph.D) அல்லது சட்டம்/மேனேஜ்மெண்ட்/நிதி/கணக்கு துறைகளில் நிபுணத்துவப் படிப்பு
- குறைந்தது 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட அனுபவம்
- கணினி பயன்பாட்டில் 1 ஆண்டு டிப்ளமோ மற்றும் சாப்ட்வேர் பயன்பாட்டில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் முன்னுரிமை
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசின் குரூப் A மற்றும் B பிரிவுகளில் நிரந்த பணியிடங்களுக்கான UPSC ஆட்சேர்ப்பு அறிவிப்பின் கீழ், விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல், அல்லது நேர்காணல் மட்டும் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் மட்டும் நடைபெற்றால், 100 மதிப்பெண்கள் அளிக்கப்படும். இதற்கான இறுதி முடிவை UPSC அதிகாரப்பூர்வமாக எடுக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது? யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் அவர்களின் உரிய விவரங்களுடன் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2026



