மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இயங்குகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் யுபிஎஸ்சி-யின் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணியின் விவரங்கள்:
- அமலாக்க அதிகாரி/ கணக்கு அதிகாரி – 156
- உதவி வருமான நிதி ஆணையர் – 74
- மொத்தம் – 230
வயது வரம்பு: அமலாக்க அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 30 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினர் 33 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் 35 வயது வரையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 40 வயது வரையும் இருக்கலாம்.
உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கு பொது பிரிவினர் 35 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 38 வயது வரையும், எஸ்சி பிரிவில் 40 வயது வரையும், எஸ்டி பிரிவினர் 35 வயது வரையும் இருக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள் 45 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* அமலாக்க அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்சாலை, தொழிளாளர் சட்டம் அல்லது பொது நிர்வாகம் ஆகியவற்றின் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்: 7வது ஊழிய குழுவின் நிர்ணயம் படி, அமலாக்க அதிகாரி பதவிக்கு பதவிக்கு நிலை -8 கீழ் சம்பளம் வழங்கப்படும். உதவி வருமான நிதி ஆணையர் பதவிக்கு நிலை-10 கீழ் சம்பளம் வழங்கபப்டும்.
விண்ணப்பிக்கும் முறை: யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
கடைசி தேதி: ஆகஸ்ட் 18 வரை விண்ணப்பிக்கலாம்