உத்தரப்பிரதேச மாநிலம் கேதன் விஹாரில் வசித்து வரும் குல்வந்த் சிங் வயது 50 இவரின் மனைவி புஷ்பா சிங்வயது 38. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இளைய மகன், தனது நண்பரின் வீட்டிற்குச்சென்றுள்ளார். பின், மாலை வீடு திரும்பி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய் புஷ்பா சிங் தலை உடைக்கப்பட்டு கீழே சடலமாகக் கிடப்பதையும், தந்தை குல்வந்த் சிங் தூக்கிட்டுத்தற்கொலைசெய்து சடலமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரண்டு சடலங்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துணை ஆணையர் சிரஞ்சீவ் நத் சின்ஹா கூறுகையில், “அவர்களின் குடும்பத்தாரிடம் விசாரிக்கையில், புஷ்பா சிங் அதிகநேரம் செல்போனில் ஆண் நண்பருடன் பேசுவதால், கணவன் – மனைவியிடையே வாக்குவாதங்கள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரின் வாக்குவாதம் முற்றியதில், குல்வந்த் சிங் புஷ்பா சிங்கை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.