விழுப்புரம் மாவட்டம் வானூர் கிராமத்தை சேர்ந்த பெண் வாணி (32). இவருக்கு அதே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே வாணிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் கள்ள காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
வாணியின் தம்பியான சேட்டு (29) குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். இதனால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவார் என்று நினைத்து தம்பிக்கு பெண் பார்த்து வாணி திருமணம் செய்து வைத்தார். இருந்தாலும் குடிப்பழக்கத்தை கைவிடாத சேட்டு தினம் தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அவருடைய மனைவி அவரைப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகின்றார்.
தம்பி யாரும் இல்லாமல் தனியாக வசிப்பதை நினைத்து வருத்தப்பட்ட வாணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தம்பிக்காக சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குடி போதையில் இருட்ந்த சேட்டு அக்காவை தவறாக தொட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த வாணி நான் உன்னுடைய அக்கா என்று கண்டித்துள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில், அங்கிருந்த சேலையால் வாணியின் கை கால்களை கட்டி அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய வாணி உடனே போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சேட்டு வை கைது செய்து சிறையில் அடைத்தனர். உடன்பிறந்த அக்காவை தம்பி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



