திருவிழாவுக்கு வந்த கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!! கள்ளக்காதலனுக்காக நடுரோட்டில் உடலை புதைத்த அதிர்ச்சி சம்பவம்..!!

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் பாரதி (35). இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு, 2 பிள்ளைகள் உள்ளன. சென்னையில் தங்கியிருந்து டீக்கடை ஒன்றில் பாரதி பணியாற்றி வந்தார். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் என்ற சதீஷ்குமாருடன் திவ்யா கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கோவில் திருவிழாவிற்காக சென்னையில் இருந்து பாரதி சொந்த ஊருக்கு சென்றிருந்த திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து பாரதியின் உறவினர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், பாரதியின் மனைவி திவ்யா மீது சந்தேகம் ஏற்படவே அவருடைய செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திவ்யா தனது கள்ளக்காதலன் சதீஷ்குமாருடன் சேர்ந்து கணவர் பாரதியைக் கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திவ்யா மற்றும் சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், பாலத்திற்காக போடப்பட்ட சாலையில் புதைக்கப்பட்ட பாரதியின் உடலை தோண்டி எடுத்து, மருத்துவர்கள் உதவியுடன் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

CHELLA

Next Post

தமிழ்நாட்டில் சாலை வரி உயருகிறது..? பைக், கார்களுக்கு இத்தனை சதவீதம் வரி உயர்வா..? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Mon Jun 19 , 2023
தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறையில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் சட்டசபை பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போதே சாலை வரி விகிதங்களை உயர்த்தவும் அதில் குறிப்பிட்டிருந்தார். காரணம், தமிழ்நாட்டில் உள்ள இப்போதைய வரி விகிதங்கள், தென் மாநிலங்களிலேயே மிக குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து, வரியை சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறையும், தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை […]
202111071630320830 Rain damage in Chennai 15 IAS officers appointed SECVPF

You May Like