கமல் ஹாசன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இயங்கிவருகிறார். அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா இயக்கியிருந்த அந்தப் படம் செம ஹிட் ஆனது. கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்தச் சூழலில் அப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், “சிகப்பு ரோஜாக்கள் படத்தை வெறும் 20 நாட்களில் முடித்தேன். அந்தப் படத்தில் ஒரு கருப்பு பூனை வரும். அந்தப் பூனைக்காக நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். ஏனெனில் கருப்பு பூனை அந்த சமயத்தில் எங்களுக்கு கிடைக்கவே இல்லை. ஒருவழியாக கருப்பு பூனை எங்களுக்கு கிடைத்துவிட்டது. முதலில் அந்த பூனையை வைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் செய்தபோது எந்தப் பிரச்னையும் வரவில்லை. ஆனால் அடுத்த நாளில் அந்தப் பூனை காணாமல் போய்விட்டது.
பூனை காணாமல் போனதை தெரிந்துகொண்டு பூனையை வளர்த்தவர் கேஸ் போட்டுவிட்டார். கடைசிவரை அந்த பூனையை எங்களால் கண்டுபிடிகக்வே முடியவில்லை. ஒருவழியாக அவரை கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினோம். அதனையடுத்து அவர் அந்த கேஸை வாபஸ் வாங்கினார். இப்படி பல விஷயங்களை கடந்து அந்தப் படம் முடிக்கப்பட்டது. படமும் சூப்பர் ஹிட்டடித்தது” என்றார்.
Read more: நெய்யை வைத்து இப்படி கூட மசாஜ் செய்யலாமா..? ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஆயுர்வேத ரகசியம்..!!



