உஷார்..! Year-End பார்ட்டி சீசன் உங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.. மருத்துவர்கள் வார்னிங்..!

heart attack

ஆண்டு முடிவு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், நண்பர்களை சந்திப்பது, அதிகமாக சாப்பிடுவது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் இதே நேரத்தில் மருத்துவர்கள் ஒரு கவலைக்கிடமான போக்கு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


சமீப காலமாக, இளம் வயதினரிடையே இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதில் இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் திடீரென உயர்வு, மேலும் மார்பு வலி போன்ற இதயக்கோளாறு அறிகுறிகள் கூட அடங்கும்.

பொதுவாக இதய நோய்கள் முதியவர்கள் அல்லது ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு தான் அதிக ஆபத்தானவை என கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாறிய உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் காரணமாக, 30–45 வயதிற்குள் உள்ள பலர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமாக கூறப்படுவது “ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்” (Holiday Heart Syndrome) என்ற நிலை.

ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் என்றால் என்ன?

இது இதய தாளக் கோளாறு அல்லது ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதிகளில் அதிகமாக மது அருந்துதல், அதிக அளவில் சாப்பிடுதல் போன்றவை இந்த நிலையை தூண்டக்கூடும்.

இதன் பொதுவான அறிகுறிகளில், இதயம் வேகமாக அல்லது ஒழுங்கின்றி துடிப்பது, மூச்சுத்திணறல், அதிக சோர்வு ஆகியவை அடங்கும்..

மருத்துவ நிபுணர்கள் பேசிய போது “ மது இதய செல்களில் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இதயத்தின் மின்சாரச் சிக்னல்கள் ஒழுங்கின்றி இயங்கத் தொடங்குகின்றன. பல சந்தர்ப்பங்களில் மது அருந்துவதை நிறுத்தியதும் இந்த பிரச்சனை குறையலாம். ஆனால், அதிக மது, உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் அதிகமுள்ள ஜங்க் உணவுகள் இதயத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இது உணர்த்துகிறது. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடித்தல், உணவு கட்டுப்பாடு, மற்றும் அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது கடுமையாக இருந்தாலோ உடனடி மருத்துவ ஆலோசனை பெறுதல் மிகவும் அவசியம்..” என்று தெரிவித்தனர்..

ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கு அதிகமாக மது அருந்துவது மட்டுமல்லாமல், உடல் இயக்கம் குறைவாக இருப்பது, மனஅழுத்தம் (உணர்ச்சிப் மற்றும் நிதி தொடர்பான அழுத்தம்) போன்ற காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..

மேலும், குளிர்கால வானிலை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புத் தட்டு பிளவுபடுவதற்கான அபாயம் அதிகரித்து, இதயக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு உயரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான காரணங்கள்

இதய நோய் இல்லாதவர்களுக்குக் கூட இந்த நிலை ஏற்படலாம். ஆனால் கீழ்கண்ட காரணிகள் இருந்தால், மது அருந்துவதால் இதய தாளக் கோளாறு (AFib) ஏற்படும் அபாயம் அதிகமாகும்:

உயர் ரத்த அழுத்தம் (Hypertension)

இதயத்தின் கட்டமைப்பில் (வால்வுகள் போன்றவை) பிரச்சனை இருப்பது

இதயம், ரத்த நாளங்கள் மற்றும் உடல் சக்தி மாற்றத்தை பாதிக்கும் நோய்கள்

65 வயதுக்கு மேல் இருப்பது

ஆண் மற்றும் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

சர்க்கரை நோய்

உடல் பருமன்

ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

மருத்துவர்கள் நினைவூட்டுவது ஒன்று தான் – மிதமான பழக்கம் (Moderation) தான் பாதுகாப்பு.

நிபுணர்கள் பரிந்துரைக்கும் முன்னெச்சரிக்கை வழிமுறைகள்:

அதிகமாக மது அருந்துவதை தவிர்க்கவும் : ஒரே நேரத்தில் அதிக அளவு குடிப்பதை (binge drinking) தவிர்க்கவும்

அதிகமாக சாப்பிட வேண்டாம் : குறிப்பாக உப்பு அதிகமுள்ள உணவுகள் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை உயர்த்தும்.

நீரிழப்பை தவிர்க்கவும் : மது அல்லது சர்க்கரை கலந்த பானங்கள் குடித்தால், தினமும் 8–10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம்.

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள் : விடுமுறை கால நிதி, உறவுகள் போன்ற அழுத்தங்களை தியானம், மூச்சுப் பயிற்சி மூலம் குறைக்கலாம்.

போதுமான தூக்கம் அவசியம் : தினமும் 7–8 மணி நேரம் தூங்குவது, உடல் சோர்வையும் இதய அபாயத்தையும் குறைக்கும்.

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள் : விடுமுறை காலத்திலும் தினமும் 5,000 முதல் 10,000 அடிகள் நடப்பது, கூடுதல் கலோரிகளை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

மொத்தத்தில், கொண்டாட்டங்களையும் ஆரோக்கியத்தையும் சமநிலைப்படுத்துவது தான் ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் போன்ற அபாயங்களை தவிர்க்கும் முக்கிய வழி என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Read More : தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துமா? நிபுணர்கள் விளக்கம்!

RUPA

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது...!

Fri Dec 19 , 2025
ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 […]
modi award 2025

You May Like