கொள்கை எதிரிகளோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் விஜய் கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டா. அப்போது பேசிய அவர் “ கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம்.. ஆனால் தமிழகத்தில் எடுபடாது..
சமூக நீதியும், நல்லிணக்கமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண்.. தந்தை பெரியாரை அவதிமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ, தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றி பெறாது..
சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடி குழைந்து கூட்டணி போக, திமுகவோ அதிமுகவோ இல்லை நம் தமிழக வெற்றிக்கழகம். கொள்கை எதிர்கள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிராக தான் இருக்கும்.. அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல.. உறுதியான தீர்மானம்..” என்று தெரிவித்தார்.