தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு சென்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
காலையிலேயே மக்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுகிறார்கள். 9 மணிக்கு ரேஷன் கடை திறந்தாலும் கூட 8 மணிக்கே மக்கள் வந்து வரிசையில் நிற்கும் நிலை உள்ளது. இன்று சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட 90 ரேஷன் கடைகளிலும் 20 – 30 அடிக்கு நீண்ட லைன் நின்றது. வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கூடுதல் தக்காளி இதனால் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளுக்கு முக்கியமான ஒரு உத்தரவு சென்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி, எக்காரணம் கொண்டும் ரேஷன் கடைகளில் தக்காளி தட்டுப்பாடு ஏற்பட கூடாது. தக்காளி, கொள்முதல் செய்யப்பட்ட விலைக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும். ரேஷன் கார்டுக்கு சரியாக தினமும் 1 கிலோ கொடுக்கும் அளவிற்கு தக்காளி இருக்க வேண்டும். தக்காளி இருப்பில் தட்டுப்பாடு இருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முடிந்த அளவு காயாக இருக்கும் நிலையில் தக்காளிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம்.