புதிய தகவல்…! கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு… உயர் கல்வித் துறை விளக்கம்…!

கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தியிடம் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து ஒருவர் கேட்டதற்கு அரசு எங்களிடம் விளக்கம் மட்டுமே கேட்டுள்ளது. கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்

Vignesh

Next Post

#Tngovt: 100 யூனிட் இலவச மின்சாரம்...! ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டுமா....? செய்தியின் உண்மை என்ன...?

Sat Nov 19 , 2022
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்கும் என்ற செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்த திருத்தத்தின் போது வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பரவலாக எழுந்து வந்தது. அதன் பின்னே இதனால் […]
’உங்க வீட்ல கரண்ட் பில் அதிகமா வருதா’..? இதை செய்தாலே பாதி பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

You May Like