இந்த ஆண்டு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்! -பஞ்சாங்கம் கணிப்பு

இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், இந்திய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை புரிவார்கள் எனவும் கோயில் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இக்கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளினர். பின் பக்தர்களுக்கு தீர்த்தவாரி உற்ஸவம், சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.

அதன் பிறகு நேற்று பிற்பகலில் ராமேசுவரம் கோவிலின் சுவாமி சன்னதி பிரகாரத்தில் அமைந்து உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு சித்திரை 1-ந்தேதியில் இருந்து 2025-ம் ஆண்டு பங்குனி 31-ஆம் தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பஞ்சாங்கமாக வாசிக்கப்பட்டது. இந்த பஞ்சாங்கத்தை கோவில் குருக்கள் உதயக்குமார் வாசித்தார். பஞ்சாகத்தில் வாசிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் பின்வருமாறு,

இந்தியாவில் அதிக மழையால் விவசாயம் செழிக்கும். அதே நேரம் வெள்ளப்பெருக்கால் மக்களுக்கு பாதிப்பும் ஏற்படும். மத்திய அரசு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்துறையில் சாதனை புரிந்து இந்திய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதிப்பார்கள். இதன் மூலம் உலக அரங்கில் இந்தியா முதலிடம் பெற்று சாதனை படைக்கும். அரசியலில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் மேலும் விரிவடையும்.

அரசியல் கூட்டணி மாறுபடும். அரசியல்வாதிகள் புதிய வழக்கில் சிக்குவார்கள். புதிய வரி உயர்வு குறிப்பாக மின்கட்டணம் மேலும் அதிகரிக்கக் கூடும். இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் சாதனை படைப்பார்கள். போதை பொருள் புழக்கம் மேலும் அதிகரிக்க கூடும். கல்வி கட்டணம் உயரும். அதே நேரம் கல்வி சுமையும் குறையும். எல்லையில் போர் பதட்டம் இருக்கும். முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு பிரச்னை ஏற்படும். உலக அளவில் புதிய கொடிய நோய் பரவ வாய்ப்பு உள்ளது என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்தாக கோயில் குருகள் தெரிவித்தார்.

Next Post

ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுடையது: வெளியானது முதல் தகவல் அறிக்கை..! சிக்கலில் பாஜக வேட்பாளர்..!

Mon Apr 15 , 2024
சென்னை ரயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் […]

You May Like