இரண்டில் ஒன்று இருக்காது!… தேர்தலுக்குபின் அது நிச்சயம் நடக்கும்!… அதிமுக குறித்து அண்ணாமலை சாடல்!

Annamalai: நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிட கட்சி கரைந்து போகும் என்று அதிமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவையில் தனியார் செய்தி சேனலுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட கட்சிகளும் பாஜக உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எங்கெல்லாம் பாஜகவின் கை ஓங்குகிறதோ அங்கெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயல்படுவார்கள். ஆனால் அந்த இரண்டு கட்சிகளின் வாக்காளர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் வாக்காளர்கள்.

2024ஆம் ஆண்டு இந்த இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி கரைந்து போகும். காரணம், ஒரு கட்சியின் கூட்டணி பலமாக இருப்பதால் அது உடனே கரைய வாய்ப்பில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு திராவிட கட்சி கரைந்து போகும். திமுக எதிர்ப்புக்காக ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா? திமுக எதிர்ப்பு என்பது ஒரு கொள்கையே கிடையாது” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Readmore: இதெல்லாம் ஒரு வழக்கா?… வழக்கறிஞரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!

Kokila

Next Post

மக்களே குட் நியூஸ்..!! ரேஷன் அட்டையில் பெயர் இல்லையென்றாலும் பொருட்கள் கிடைக்கும்..!!

Thu Apr 11 , 2024
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகவும் தவித்து வந்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் மக்களுக்கு அவர்களின் ரேஷன் அட்டைக்கு வழங்கப்படும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை நாடு முழுவதும் உள்ள 80 கோடி பேருக்கும் […]

You May Like