மனை பிரிவுகளில் உள்ள பொது ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, திருமண மண்டபம் சமுதாய நலக்கூடம், சிறுவர் பள்ளி போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். மாறாக வேறு எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது இன்று நகர் ஊரமைப்பு இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஊரமைப்பு இயக்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விரிவான அபிவிருத்தி திட்டங்கள் (Detailed Development Plan) தயாரிக்கப்படும்போது ஒப்புதலளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளிலுள்ள பொது ஒதுக்கீடுகள், விரிவான அபிவிருத்தி திட்டங்களின் பொது ஒதுக்கீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பொது ஒதுக்கீடுகள் நகர் ஊரமைப்பு சட்டம், 1971 பிரிவு 38-ன் கீழ் கையகப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டு அதனை விடுவிக்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் மூலம் விடுவிக்கப்படுவது தெரியவருகிறது. இத்தகைய மனைப்பிரிவு பொது ஒதுக்கீடுகளுக்கு, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம், 1971, பிரிவு 38-ன் கீழ் விடுவிப்பது பொருந்தாது.
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழக்குகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில் பொது உபயோக ஒதுக்கீடுகளாக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை அதன் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, வேறு எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மனைப்பிரிவுகளில் பொது எனவே, உயர்நீதிமன்ற வழக்குகள், உச்சநீதிமன்ற வழக்குகள், நகராட்சி நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் சுற்றறிக்கை ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டவாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளாக (Public Purpose) உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருமண மண்டபம், சமுதாய நலக்கூடம், சிறுவர்பள்ளி போன்ற இடங்களை வேறு எவ்வித உபயோகங்களுக்கு மாற்றம் செய்திட அம்மனைப்பிரிவில் உள்ள பூங்கா, திறவிடம், சிறுவர் விளையாடுமிடம் போன்ற பொது ஒதுக்கீடுகளை (Public Purpose) 10% நிலைநிறுத்தப்பட்டுள்ளதை அசல் மனைப்பிரிவு வரைபடம், அசல் செயல்முறை ஆணை மற்றும் அசல் மனைப்பிரிவு நிபந்தனைகள் போன்ற உண்மையான உத்தரவுகளைக் கொண்டு உறுதி செய்து ஏனைய விற்பனைக்குரிய பொது ஒதுக்கீடுகளை வேறு உபயோகங்களுக்கு மாற்றம் செய்ய கோரும் உத்தேசங்களின் மீது சுற்றறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: அதிர்ச்சி…! திருப்புவனம் அஜித் போல் மற்றொரு சம்பவம்…! அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்…!