2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ளது.. விருதை அறிவிக்க இன்னும் சில மணி நேரம் உள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் , பராக் ஒபாமா மீது கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டிற்காக எதுவும் செய்யாத போதிலும் ஒபாமா நோபல் பரிசை பெற்றதாக தெரிவித்துள்ளார்.. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ட்ரம்ப் “ 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது அசாதாரண முயற்சிகளுக்காக பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் எதுவும் செய்யாததற்காக அதைப் பெற்றார். ஒபாமாவுக்கு ஒரு பரிசு கிடைத்தது.. அது அவருக்கு என்னவென்று கூடத் தெரியவில்லை.. ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர்கள் அதை ஒபாமாவுக்கு எதையும் செய்யாமல், நம் நாட்டை அழித்ததற்காகக் கொடுத்தார்கள்.. ஆனால் அவர் நம் நாட்டை அழித்ததற்காக பரிசு கொடுத்தனர்.” என்று தெரிவித்தார்.
2025 இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட பல போர்களைத் தீர்ப்பதில் உதவியதாகக் டிரம்ப் கூறியுள்ளார். போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதாக அவர் கூறினார், ஆனால் 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். மோதல்களைத் தீர்ப்பதன் மூலம், உயிர்களைக் காப்பாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பதையும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
“எனக்கு ஒன்று தெரியும். அவர்கள் உண்மையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்குத் தெரியும்: வரலாற்றில் யாரும் 9 மாத காலத்திற்குள் எட்டு போர்களைத் தீர்த்ததில்லை. நான் எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன்.. இதுவரை அது நடந்ததில்லை. ஆனால் அவர்கள் செய்வதைச் செய்ய வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. எனக்குத் தெரியும்: நான் அதற்காக அதைச் செய்யவில்லை. நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றியதால் அதைச் செய்தேன்.” என்று தெரிவித்தார்..
இதுவரை, ஒபாமா உட்பட 4 அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். 1906 இல் தியோடர் ரூஸ்வெல்ட், 1919 இல் உட்ரோ வில்சன், 2002 இல் அதைப் பெற்ற ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்தியா வந்த தலிபான் அமைச்சர்; விரக்தியில் காபூலில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்.. பகீர் தகவல்கள்!