Flash: பெரம்பூர் தொகுதியில் விஜயை எதிர்த்து நிக்கும் திலகபாமா.. பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

vijay thilaga

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.


அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் பாமகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி..

* தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.

* சென்னை பெரம்பூரில் பாமக சார்பில் பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார்.

* பொன்னாகரம் தொகுதியில் பாடி வெ.செல்வம் போட்டி

* சேலம் மேற்கு தொகுதியில் கார்த்தி போட்டி

* திருப்போரூர் தொகுதியில் வழக்கறிஞர் பாலு போட்டி

* போரூர் தொகுதியில் சி.ஆர்.பாஸ்கரன் போட்டி

* காட்டுமன்னார் கோவிலில் பாமக சார்பில் அன்புச் சோழன் போட்டி

* மயிலாடுதுறையில் பாமக சார்பில் சித்தமல்லி ஏ.பழனிச்சாமி போட்டி

* ஜெயம் கொண்டம் தொகுதியில் க.வைத்தி போட்டி

* சேலம் வடக்கு தொகுதியில் எஸ். சதாசிவம் போட்டி

* விக்கிரவாண்டியில் சி.சிவக்குமார் போட்டி

* சோளிங்கர் தொகுதியில் க.சரவணன்.

* மயிலம் தொகுதி சிவக்குமார்.

இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்துள்ளதால் பல தொகுதிகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. விஜய்யை வீழ்த்த திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகர் போட்டியிடுகிறார். மறுபுறம், அதிமுக எந்த வேட்பாளரை நிறுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தங்களது கூட்டணியில் உள்ள பாமகவிற்கு இந்த தொகுதியை ஒதுக்கியது. பாமக வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக தரப்பில் திலகபாமா போட்டியிடுகிறார்.

Read more: குவைத்தில் இந்திய தொழிலாளி பலி.. மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்.. வளைகுடாவில் தொடரும் பதற்றம்..!

English Summary

Thilagavama to contest against Vijay in Perambur constituency.. PMK candidate list released!

Next Post

இந்தியா முழுவதும் பள்ளிகளுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய நபர் கைது.. காவல்துறை அதிரடி..!

Mon Mar 30 , 2026
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சீனிவாஸ் லூயிஸ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஆவார். சீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை […]
bomb threat

You May Like