fbpx

தூள்…! தொழில்களுக்கு தமிழக அரசு வழங்கும் 25% முதலீட்டு மானியம்…! எப்படி பெறுவது…?

தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

English Summary

25% Investment Subsidy from Tamil Nadu Govt

Vignesh

Next Post

தசை வளர்ச்சி முதல் மூளை ஆரோக்கியம் வரை!. வேகவைத்த முட்டையில் இத்தனை நன்மைகளா?.

Mon Sep 2 , 2024
Discover The Incredible Benefits Of Boiled Eggs For Muscle Growth And Brain Health

You May Like