மங்குஸ்தான் பழம், மலேசியா, இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தென்னிந்திய பகுதியில் மலைப்பிரதேசங்களில் தோட்டப்பயிராக மங்குஸ்தான் பழத்தை விளைவித்து வருகின்றனர். இந்த பழம் மாதுளை பழத்தை போலவே வெளிப்புற தோல் பகுதி கடினமானதாகவும், உட்புறம் மெதுவானதாகவும் இருக்கும்.
மேலும் மங்குஸ்தான் பழம் மலை பகுதியில் வாழும் மக்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது குறித்தும், இதய நோய்க்கு அருமருந்தாக மங்குஸ்தான் பழம் இருந்து வருகிறது என்பது குறித்தும் தெரியுமா? மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து பார்க்கலாம்.
* வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.
* ஒரு சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகமாகாது. அப்படிப்பட்டவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை விரைவில் அதிகமாகும்.
* ஒமேகா என்ற அமிலம் மங்குஸ்தான் பழத்தில் அதிகமாக உள்ளது. இது இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
* நார்ச்சத்து அதிகம் உள்ள மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
* மூலநோய் இருப்பவர்கள் மங்குஸ்தானை ஜூஸாக தினமும் காலையில் குடித்து வரலாம்.
* மங்குஸ்தான் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
* மங்குஸ்தான் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு மற்றும் பிற உச்சந்தலைப் பிரச்சினைகளைக் குறைக்கவும் உதவும்.
* சில ஆய்வுகள் மங்குஸ்தான் சாறுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகின்றன.
Read More : தலையில் கை வைத்து கதறி அழுத பெண்..! எச்சரித்த டிரம்ப்..!! ஆடிப்போன ஜெலன்ஸ்கி..!! திடீரென திரும்பிய கேமரா..!!