fbpx

சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட குளிர் கால நோய்களிலிருந்து பாதுகாக்க ஒரு அற்புத மருந்து!

நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு இயற்கையான மருந்துகள் இருந்தாலும் பொதுமக்கள் அதனை நாடாமல், மருந்து மாத்திரை என்று பல கெமிக்கல் கலந்த பொருட்களை நாடிச் சென்று மருத்துவம் செய்துகொள்கிறார்கள்.

என்னதான் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, மருந்து, மாத்திரைகள் வழங்கும் மருத்துவம் நடைபெற்று வந்தாலும். ஆனால் இன்றளவும் ஆயுர்வேதம் தொடர்பான இயற்கை மருத்துவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஆயுர்வேத மருத்துவம் என்பது முழுக்க, முழுக்க இயற்கை மருந்துகளை சார்ந்தது. மேலும் மனிதனுக்கு வரும் நோய்களை தீர்த்து வைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்திகளையும் மனித உடலில் ஏற்படுத்துவதற்கு இந்த ஆயுர்வேத மருத்துவம் உதவுகிறது.

அந்த வகையில் தான் தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் முடிவடைந்து முழுமையான குளிர் காலமான மார்கழி மாதம் பிறக்க இருக்கின்றது. மார்கழி மாதம் ஏற்படும் குளிரை பற்றி பொதுமக்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

இந்த குளிர்காலத்தில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்து வரும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களிலிருந்து பொதுமக்களை அவர்களே தற்காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்படி பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதும் மிகவும் அவசியம். மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கான உணவுகளின் ஒன்றாக இருப்பது நெல்லிக்காய்.

தமிழகத்தின் பழம்பெரும் புலவர் ஔவையின் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அதியமான் என்ற மன்னன் நெல்லிக்காயை வழங்கிய கதையை நாம் அனைவரும், பள்ளி பருவங்களில் இருந்தபோது கேட்டிருக்கலாம். அதோடு அந்த நெல்லிக்கனி தொடர்பான அருமை என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். விட்டமின் சி சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளிட்டவை நிறைந்த இந்த நெல்லிக்காயை நாம் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த குளிர்காலத்தில் அதிகமாக உண்டாகும் கனி வகைகளில் ஒன்றாக நெல்லிக்காய் இருக்கின்றது. கசப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு உள்ளிட்ட சுவைகளின் தன்மையை கொண்ட நெல்லிக்காய்க்கு நம்முடைய உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் சக்தி உள்ளது. ஆகவே இந்த நெல்லிக்கனியை நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மேலும் நெல்லிக்கனியில் விட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இதனை நாம் தற்போதைய குளிர் காலத்தில் நிச்சயமாக சாப்பிட வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பருவ காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த நெல்லிக்கனி உதவிகரமாக இருக்கும்.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் இது நம்முடைய உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருக்கும்.

மனித உடலில் இருக்கின்ற செல்கள் பாதிப்புக்கு உள்ளாவதை நெல்லிக்காய் தடுத்து விடுகிறது. அதோடு, உடலில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் தன்மை இந்த நெல்லிக்காய்க்கு இருக்கிறது இந்த விதத்தில் இதயத்தின் நலனை மேம்படுத்துவதற்கு நெல்லிக்கனி உதவியாக இருக்கிறது. நாள்தோறும் தேன் நெல்லியை சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலில் இளமையான தோற்றம் வரலாம்.

மேலும் தற்போதுள்ள குளிர் காலத்தில் உடலில் ஏற்படும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் சக்தி நம்முடைய உடலுக்கு இல்லாமல் போவதன் காரணமாக, சளி இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன. ஆனால் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த நோய்களால் நமக்கு பாதிப்பு எதுவும் வராது என்று சொல்லப்படுகிறது.

Kathir

Next Post

இளம் பெண்களே! இதை நீங்கள் செய்தால் இனி உங்களுக்கு என்றும் இளமை தான்!

Wed Dec 7 , 2022
பெண்கள் எல்லாவற்றிலுமே சற்று மும்முரமாகத்தான் இருப்பார்கள். அதிலும் அவர்கள் உடை மாற்றுவது, அலங்காரம் செய்வது என்று தான் சார்ந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தன்னுடைய சருமத்திற்கு அழகு மேன்மேலும் கூட வேண்டும் என்ற ஆர்வத்தால் பல இளம் பெண்கள் அழகு சாதன பொருட்கள் என்ற பெயரில் பல கெமிக்கல்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தி அதன் மூலமாக தங்களுடைய அழகை நிரந்தரமாக இழந்து வருகிறார்கள் என்று சொன்னால் […]

You May Like